(காணொளி): மாதின் கண்களிலிருந்து 23 'கான்டெக்ட் லென்ஸ்'களை அகற்றிய மருத்துவர்

(காணொளி): மாதின் கண்களிலிருந்து 23 'கான்டெக்ட் லென்ஸ்'களை அகற்றிய மருத்துவர்

1 mins read
9b1e9115-6ed9-43b4-8eaa-6de394916520
படம்: கலிஃபோர்னியா ஐ அசோசியேட் -

மாது ஒருவர் கண்களிலிருந்து கான்டெக்ட் லென்சை அகற்றாமல், தமக்கே தெரியாமல் தொடர்ந்து 23 கான்டெக்ட் லென்ஸ்களை கண்களில் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தார்.

அவரின் கண்களில் இருந்து மருத்துவர் 23 கான்டெக்ட் லென்ஸ்களையும் நீக்கியுள்ளார். அந்தக் காட்சியை தம்முடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் அந்த மருத்துவர் பதிவிட்டார்.

"யாரோ ஒருவர் இரவில் கான்டெக்ட் லென்சை கழற்றுவதை மறந்துவிட்டு, தினமும் காலையில் புதிய கான்டாக்ட் லென்சை போட்டுக்கொண்டுள்ளார். அதுவும் தொடர்ச்சியாக 23 நாள்கள் இவ்வாறு செய்துள்ளார். அவரது கண்களில் இருந்து 23 கான்டெக்ட் லென்ஸ்களை அகற்றுகிறேன். என்னுடைய மருந்தகத்திலிருந்து உண்மையான காணொளி இது.

"கான்டெக்ட் லென்ஸ்களை அகற்ற நான் மிக நுண்ணிய அறுவை சிகிச்சை கருவியான 'ஜுவல்லர் ஃபோர்செப்ஸ்' பயன்படுத்தினேன். கண் இமைக்குக் கீழே இருந்த கான்டெக்ட் லென்ஸ்கள் ஒன்றோடு ஒன்று நன்றாக ஒட்டியிருந்தன.

"கான்டெக்ட் லென்சை அணிந்துகொண்டு யாரும் தூங்காதீர்கள்,'' என அந்த மருத்துவர் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த அறுவை சிகிச்சை அமெரிகாவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் நடந்ததாகத் தெரிகிறது. இந்தக் காணொளி இணையத்தில் தற்போது பரவலாகி வருகிறது.