ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் நெருக்கடி

1 mins read
8999008e-7bce-4c13-a0d6-4dd3927ef5f4
மெல்பர்னில் உள்ள மரிபெர்னோங் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனம். படம்: ஏஎஃப்பி -

மெல்­பர்ன்: தென்­கி­ழக்கு ஆஸ்­திரே­லி­யா­வில் நூற்­றுக்­க­ணக்­கான வீடு­கள் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்­ளத்­தால் நாசப்­படுத்­தப்­பட்­டுள்­ளன. மிகுந்த கவ­லை­யுடன் வீடு­க­ளுக்கு ஏற்­பட்ட சேதத்தை அறி­யும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இரண்­டாவது ஆக அதிக மக்­கள்­தொகை­யைக் கொண்ட விக்­டோ­ரியா மாநி­லத்­தில் வெள்­ளம் குறித்த பெரிய அள­வி­லான அவ­சர நிலை அறி­விக்­கப்­பட்­டது. அம்­மா­நி­லத்­தின் தலை­ந­கர் மெல்­பர்­னில் உள்ள மரி­பெர்­னோங் பகு­தி­யில் நீரின் அளவு விரை­வில் உயர்ந்­த­தைத் தொடர்ந்து பலர் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்றப்­பட்­ட­னர்.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் சிலரை மீட்­புப் பணி­க­ளுக்­கான காற்­ற­டைத்த பட­கு­களில் மீட்க வேண்­டி­யி­ருந்­தது. இங்கு சாலை­களில் இருந்த சில வாக­னங்­கள் நீரில் கிட்­டத்­தட்ட முழு­மை­யாக மூழ்­கின.

விக்­டோ­ரியா மாநி­லத்­தில் 500 வீடு­கள் வெள்­ளத்­தால் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­ட­தாக அம்­மா­நி­லத்­தின் முத­ல­மைச்­சர் டேனி­யல் ஆண்­டு­ரூஸ் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார். மேலும் 500 வீடு­களைச் சுற்றி வெள்­ளம் சூழ்ந்ததாகவும் அவ­ச­ரச் சேவை­கள் அவற்றை சென்­ற­டைய முடி­யாத நிலை உருவானதாகவும் அவர் கூறி­னார்.

இந்த எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.