சிட்னியில் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட இந்தியர்

சிட்னியில் 11 முறை கத்தியால் குத்தப்பட்ட இந்தியர்

1 mins read
3b022296-3eb1-42b2-b177-478a51e29489
-

சிட்னி: இந்­தி­யா­வின் உத்­தி­ரப் பிர­தேச மாநி­லத்­தில் இருக்­கும் ஆக்ரா நகரைச் சேர்ந்த மாண­வரை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஒரு­வர் 11 முறை கத்­தி­யால் குத்­தி­யி­ருக்கிறார். இது ஓர் இன ரீதி­யான தாக்­கு­த­லாக இருக்­க­லாம் என்று சந்தேகிக்கப்­ப­டு­கிறது.

சம்­ப­வம் சிட்னி நக­ரின் லேன் கோவ் பகு­தி­யில் நிகழ்ந்­தது. குத்­தப்­பட்ட ஷுபம் கார்க் எனும் ஆட­வ­ருக்­குத் தன்­னைத் தாக்­கி­ய­வ­ரைத் தெரி­யாது. தாக்­கி­ய­வர் ஓர் 27 வயது ஆட­வர் என்று அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

இதன் தொடர்பில் ஷுபம் கார்­கின் குடும்­பத்­தார் உதவி நாடு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.