கம்போடிய படகு மூழ்கியது; எட்டு சிறுவர்கள் மரணம்

கம்போடிய படகு மூழ்கியது; எட்டு சிறுவர்கள் மரணம்

1 mins read
4155edd4-a62b-4870-a964-babe32a61327
-

நொம் பென்: கம்­போ­டி­யா­வில் படகு ஒன்று மூழ்­கி­ய­தில் குறைந்­தது எட்டு சிறு­வர்­கள் மாண்­ட­னர். மேலும், மூன்று சிறுவர்களைக் காணவில்லை.

மாண்ட சிறுவர்கள் 12லிருந்து 15 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆங்­கி­லப் பாடத்­துக்­குச் சென்ற சிறு­வர்­களை வீட்­டுக்கு அழைத்து வந்­து­கொண்­டி­ருந்­த­போது படகு மெக்­கோங் ஆற்­றில் மூழ்­கி­ய­தா­கக் காவல்­துறை கூறி­யது. அள­வுக்­க­தி­க­மா­னோரை ஏற்­றிச் சென்­ற­தால் படகு மூழ்­கி­ய­தா­கக் காவல்­து­றை­ தெரி­வித்­த­து. கண்­டல் மாநி­லத்­தில் சென்­ற­டை­ய­வி­ருக்­கும் இடத்­தி­லிருந்து 50 மீட்­டர் தொலை­வில் படகு மூழ்கியது.