மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
கனமழை குறைந்து, நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் தணிந்து வருகிறது. மூன்று மாநிலங்களில் வெள்ளநீர் வீதிகளையும் வீடுகளையும் வாகனங்களையும் மூழ்கடித்ததைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள் துப்புரவுப் பணியைத் தொடங்கினர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மெல்பர்னும் அடங்கும்.
கடந்த ஈராண்டுகளாக கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதற்கு 'லா நினா' வானிலை நிகழ்வே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

