துருக்கியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று வெடித்ததில் குறைந்தது 41 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் துருக்கியின் பார்ட்டின் மாநிலத்தில் நிலத்துக்கு 350 மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது. வெடிப்பு நேர்ந்தபோது சுரங்கத்தில் இருந்த 110 பேரில் 58 பேர் மீட்கப்பட்டனர் அல்லது அவர்களாகவே வெளியேறினர் என்று துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலேமான் சொய்லு முன்னதாகக் கூறியிருந்தார். வெடிப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம்: ஏஎஃப்பி

