கம்போடிய படகு விபத்து: மூவர் தடுத்துவைப்பு

கம்போடிய படகு விபத்து: மூவர் தடுத்துவைப்பு

1 mins read
fc60552f-23fc-4dbf-ae99-62c79982889c
-

நோம்பென்: கம்­போ­டிய படகு விபத்­தில் 11 சிறார்­ உயி­ரி­ழந்­த­தைத் தொடர்ந்து, படகு உரி­மை­யா­ளர்­கள் இரு­வ­ரை­யும் படகை இயக்­கிய 15 வயது நப­ரை­யும் அதி­கா­ரி­கள் தடுத்து வைத்­துள்­ள­னர். கடந்த வியா­ழக்­கி­ழமை ஆங்­கில வகுப்பு முடிந்து மாண­வர்­கள் பட­கில் வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­போது மெக்­கோங் ஆற்­றில் படகு மூழ்­கி­யது.

மாணவர்கள் 12லிருந்து 15 வய­துக்­கு உட்பட்டவர்கள். இந்­நிலை­யில், விபத்து தொடர்­பில் விசா­ர­ணைக்­காக மூவர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக உள்ளூர் காவல்­துறை தலை­வர் தெரி­வித்­தார். அந்த மூவ­ரும் கண்­டல் மாநில காவல்­துறை தலை­மை­ய­கத்­துக்கு அனுப்­பப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார். அங்கு அவர்­கள்­மீது எடுக்­கப்­படும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­ தீர்மானிக்கப்படும். இதற்­கி­டையே, மரண எண்­ணிக்கை 11ஆக உயர்ந்­துள்ள வேளை­யில், விபத்­தில் உயிர் பிழைத்­த­வர்­க­ளைத் தேடும் பணியை அதி­கா­ரி­கள் நேற்­றுக் காலை நிறுத்­திக்­கொண்­ட­னர்.