அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஆறு தொடர் கொலைகள் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் துப்பாக்கி இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 43 வயதான வெஸ்லி பிராவ்னலீ எனக் கூறப்பட்டது. அவர் ஆறு பேரை சுட்டுக் கொன்றாக நம்பப்படுகிறது. சென்றாண்டு தொடங்கிய கொலை சம்பவங்கள் இவ்வாண்டு செப்டம்பர் வரை நீடித்தது.

