ரஷ்ய இராணுவ தளத்தில் துப்பாக்கிச் சூடு: 11 மரணம்

ரஷ்ய இராணுவ தளத்தில் துப்பாக்கிச் சூடு: 11 மரணம்

1 mins read
12584abc-a026-4936-ba19-af93edaf723c
படம்: ராய்ட்டர்ஸ் -

ரஷ்யாவில் உள்ள இராணுவ பயிற்சி தளம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். ரஷ்ய-உக்ரேன் எல்லைக்கு அருகே உள்ள ஒரு இராணுவ தளத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. போரில் சண்டையிடுவதற்காக முன்வந்தவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.

மாண்டவர்களின் எண்ணிக்கை 11க்கும் அதிகம் என ரஷ்யாவில் இயங்கும் சில தனிச்சை ஊடகங்கள் குறிப்பிட்டன.

கிரைமியா பகுதியில் பாலம் ஒன்று ஒரு வாரத்திற்கு முன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.