வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியப் பிரதமர்

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியப் பிரதமர்

1 mins read
7ecb297a-97e8-4251-8c75-228d28a6f212
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­க­ளுக்கு அந்­நாட்டின் பிர­த­மர் ஆன்­டனி அல்­ப­னீஸ் நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்­ளார். விக்­டோ­ரி­யா­வின் தலை­ந­கர் மெல்­பர்­னும் அவர் போன இடங்­களில் அடங்­கும்.

கிழக்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஏற்­கெ­னவே இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் மோச­மான வெள்­ளம் ஏற்­பட்­டது. 'லா நினா' பரு­வ­நிலை நிகழ்­வால் ஆஸ்­தி­ரே­லியா அடுத்­தடுத்து மூன்று முறை மோச­மான பரு­வ­நி­லையை எதிர்­கொண்­டுள்­ளது.

நகர்ப்­பு­ற­ங்­களில் வாழ்­வோர், நகர்ப்­ப­கு­தி­க­ளுக்கு அப்­பால் வாழும் சமூ­கத்­தி­னர் ஆகிய இரு தரப்­பி­ன­ரும் மோச­மான பரு­வ­நி­லை­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு அல்­பனீஸ் கூறி­னார். மக்­களை வீடு­களி­லி­ருந்து வெளி­யேற்­ற­வும் வெள்­ளத் தடுப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வும் 60 ஆஸ்­தி­ரே­லி­யத் தற்­காப்­புப் படை­யி­னர் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.