உலக வங்கி: உக்ரேனில் வறுமை 10 மடங்கு மோசமாகியுள்ளது

உலக வங்கி: உக்ரேனில் வறுமை 10 மடங்கு மோசமாகியுள்ளது

1 mins read
3db681c1-f8e0-4ac2-adfc-3339c6abcb27
-

வாஷிங்­டன்: உக்­ரே­னிய நக­ரங்­களின் பொது­மக்­க­ளுக்­கான கட்­ட­மைப்­பு­கள்­மீது ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தைத் தொடர்ந்து ஏற்­கெ­னவே மோச­மான உக்­ரேனின் பொரு­ளி­யல் மேலும் பாதிக்­கப்­படும் என்று உலக வங்­கி­யின் உய­ரிய அதி­கா­ரி­யான அனூப் பேனர்ஜி குறிப்­பிட்­டுள்­ளார். அதோடு, ரஷ்ய தாக்­கு­தல்­க­ளால் உக்­ரே­னில் இவ்­வாண்டு வறுமை 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறி­னார்.

உக்­ரே­னின் எரி­சக்தி நிலை­யங்­கள்­மீது ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்­தி­யது. அத­னால் துண்­டிக்­கப்­பட்ட மின்­சார விநி­யோ­கம் விரை­வி­லேயே சீராக்­கப்­பட்­டது.

அது, உக்­ரே­னின் போர்க்­காலத் தயார்­நி­லையை எடுத்­துக்­காட்­டு­வதாக உலக வங்­கி­யின் வட்­டார நாட்டு இயக்­கு­ந­ரான திரு பேனர்ஜி ராய்ட்­டர்ஸ் செய்தி நிறு­வ­னத்­தி­டம் அளித்த பேட்­டி­யில் சொன்­னார். எனி­னும், ரஷ்­யா­வின் போர் உத்­தி­கள் மாறி­யுள்­ள­தால் அபா­யங்­கள் அதி­க­ரித்­திருப்பதாகவும் அவர் எச்­ச­ரித்­தார்.