உலகளவில் பசி அதிகரித்து வருகிறது

உலகளவில் பசி அதிகரித்து வருகிறது

2 mins read
5d05b07a-8ebd-4a9b-84c2-9b03ca9d9bd7
-

ஆக்ரா (கானா): ஆப்பி­ரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் உணவை இறக்­கு­மதி செய்­வோர் கட்­ட­ணம் செலுத்த சிர­மப்­பட்டு வரு­கின்­ற­னர்.

உலக நாடு­கள் மோச­மான உணவு நெருக்­க­டியை எதிர்­கொண்டு வரு­கின்­றன. அத்துடன் டால­ரின் மதிப்பு கணி­ச­மாகக் கூடியுள்ளதால் உண­வின் விலை மேலும் அதி­க­ரித்­துள்­ளது. அத­னால் இந்­நிலை உரு­வா­கி­யுள்­ளது.

கிறிஸ்­து­மஸ் பண்­டி­கைக் காலத்தை முன்­னிட்டு ஆப்­பி­ரிக்­கா­வின் கானா நாட்­டில் உண­வுப் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என்று உணவை இறக்குமதி செய்வோர் தெரி­வித்­துள்­ள­னர். அண்­மை­யில் பாகிஸ்­தா­னின் துறை­மு­கங்­களில் உணவு வைக்­கப்­பட்­டி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான கொள்­க­லன்­கள் ஏற்றுமதியாகாமல் தேங்கிக்கிடக்கின்றன.

எகிப்­தில் தனி­யார் ரொட்டி கடைக்­கா­ரர்­கள் ரொட்டி விலையை உயர்த்­தினர். எல்­லைப் பகு­தி­களில் கோதுமை சிக்­கிக்­கொண்டதால் மாவு ஆலை­களில் அதற்­கான பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. அத­னால் எகிப்­தில் ரொட்டி விலை கூடியது.

அதிக வட்டி விகி­தம், உயர்ந்­து­வரும் டால­ரின் மதிப்பு உள்­ளிட்ட கார­ணங்­களால் உணவு இறக்­கு­ம­தியை நம்­பி­யி­ருக்­கும் பல உலக நாடு­கள் சிர­மத்தை எதிர்­நோக்­கு­கின்­றன.

எனி­னும், டால­ரின் மதிப்­பால் பிரச்­சினை எழ­வில்லை என்று அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் கூறி­யுள்­ளார். உல­கின் இதர பகு­தி­களில் காணப்­படும் வலு­வற்ற வளர்ச்சி, செயல்­ப­டுத்­தப்­பட்ட தவ­றான திட்­டங்­கள் ஆகி­ய­வையே உல­கப் பொரு­ளி­யல் பாதிக்­கப்­பட்­ட­தற்­கான கார­ணங்­கள் என்று அவர் சொன்­னார்.

"டால­ரைப் பற்றி எனக்கு அச்­சம் ஏதும் இல்லை. உல­கின் இதர பகு­தி­களை நினைத்­து­தான் நான் கவ­லைப்­படு­கி­றேன்," என்று திரு பைடன் அமெ­ரிக்­கா­வின் போர்ட்­லாந்து நக­ரில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

அமெ­ரிக்­கா­வின் மத்­திய வங்கி வட்டி விகி­தத்தை உயர்த்­தும் முயற்­சி­யில் பெரிய அள­வில் இறங்­கி­ய­தைத் தொடர்ந்து டால­ரின் மதிப்பு இவ்­வாண்டு சுமார் 15 விழுக்­காடு கூடி­யுள்­ளது.

மேலும், பிரிட்­டிஷ் பிர­த­மர் லிஸ் டிரஸ் முத­லில் வரைந்த பொரு­ளி­யல் திட்­டம் பங்­குச் சந்­தை­களில் பல பிரச்சினை­களை ஏற்­ப­டுத்­தி­ய­தா­க­வும் திரு பைடன் குறிப்­பிட்­டார்.

அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதால் துறைமுகங்களில் உணவு தேங்கியுள்ளது