ஈரான் சிறைச்சாலையில் தீ; நான்கு கைதிகள் மரணம்

ஈரான் சிறைச்சாலையில் தீ; நான்கு கைதிகள் மரணம்

1 mins read
1ee0f29b-c721-47f4-90c1-599a1f17261d
ஈரானின் எவின் சிறையில் தீயினால் ஏற்பட்ட சேதம். படம்: ஏஎஃப்பி -

டெஹ்­ரான்: ஈரான் தலை­ந­கர் டெஹ்­ரா­னில் இருக்கும் எவின் எனும் சிறைச்­சா­லை­யில் மூண்ட தீயால் குறைந்­தது நான்கு கைதி­கள் மாண்­ட­னர் என்­றும் 61 பேர் காய­ம­டைந்­த­னர் என்­றும் அந்­நாட்டு அர­சாங்­கத்­துக்­குச் சொந்­த­மான 'ஐஆர்­என்ஏ' ஊட­கம் தெரி­வித்­துள்­ளது. 51 பேர் வெளி­நோ­யாளி சிகிச்சை பெறு­வதா­க­வும் 'ஐஆர்­என்ஏ' கூறி­யது.

மாண்டோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் சில தகவல்கள் வெளியாயின. சம்பவம் பதிவான காணொளிகள் இணையத்தில் பகிரப்பட்டன. துப்­பாக்­கிச் சூடு சத்­தம் கேட்­ட­தா­க­வும் சம்­ப­வத்­தைக் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

ஈரா­னின் அர­சி­யல் கைதி­கள், இரு­நாட்டு குடி­யு­ரிமை உள்­ள­வர்­கள் ஆகி­யோ­ரில் பலர் இந்த சிறைச்­சாலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தடுப்­புக்­கா­வ­லில் இருந்­த­போது மஹ்சா அமினி எனும் 22 வயது குர்­தி­யப் பெண் மாண்­ட­தைத் தொடர்ந்து ஈரா­னில் கடந்த சுமார் ஒரு மாத­மாக ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்று வந்­துள்­ளன. ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து இச்­சம்­ப­வம் நிகழ்ந்­துள்­ளது.

ஆகக் கடைசி நில­வ­ரப்­படி ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­கும் எவின் சிறைச்­சாலை தீக்கும் தொடர்­புள்­ளதா என்­பது தெரி­ய­வில்லை.