கல்லால் அடித்து கொல்லப்படுவதற்கு முன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

கல்லால் அடித்து கொல்லப்படுவதற்கு முன் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்

1 mins read
a0e1f737-5226-455a-abfe-5adcb412512e
தலிபான்கள் பெண்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் (படம்: கோப்புப் படம்) -

ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளால் தேடபட்டுவந்த பெண் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அந்தப் பெண்ணைக் கல்லால் அடித்து கொல்ல தலிபான்கள் தேடிவந்தனர்.

மாண்ட பெண் திருமணமான ஆடவர் ஒருவருடன் வீட்டைவிட்டு ஒடி சென்றதாகக் கூறப்பட்டது. இதற்காக அவரைக் கல்லால் அடித்து கொல்லும்படி தலிபான் தண்டனை விதித்தது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் சிறை இல்லாததால் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே அந்தப் பெண் தன்னைத்தானே கழுத்தை நெரித்து உயிரை மாயித்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக அந்தப் பெண்ணுடன் ஓடிசென்ற ஆடவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் வீட்டைவிட்டு ஓடிசெல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பிடிப்படும் பெண்களைத் தலிபான்கள் கல்லால் அடித்து கொல்கின்றனர் அல்லது அப்பெண்களுக்குப் பொது இடத்தில் பிரம்படி கொடுக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைபற்றியதிலிருந்து தலிபான் போராளிகள் பெண்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.