இஸ்மாயில் சப்ரி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு

இஸ்மாயில் சப்ரி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு

2 mins read
f4be74aa-5607-4759-bf3c-49ba5b3a917a
-

பாகான் டத்தோ: எதிர்­வ­ரும் மலே­சி­யப் பொதுத் தேர்­த­லில் அம்னோ சார்­பில் பிர­த­மர் வேட்­பா­ள­ராக தற்­போ­தைய பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் போட்­டி­யி­டு­வார் என்று அம்­னோ­வின் தலை­வர் அக­மது ஸாஹிட் அமிடி தெரி­வித்­துள்­ளார்.

அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­னணி கூட்­டணி தேர்­த­லில் வெற்றி பெற்­றா­லும் இந்த நிலைப்­பாடு மாறாது என்­றார் அவர்.

அம்னோ வெற்றி பெற்­றால் திரு இஸ்­மா­யில் பிர­த­மர் பொறுப்­பேற்­பது சந்­தே­கம் என்று எதிர்க்­கட்­சி­கள் பொய்த் தக­வல்­கள் பரப்­பு­கின்­றன என்று திரு ஸாஹிட் சாடி­னார்.

"இஸ்­மா­யில் சப்­ரி­தான் எங்­கள் கட்­சி­யின் பிர­த­மர் வேட்­பா­ளர். இதுவே அம்னோ உச்ச மன்­றம் எடுத்­தி­ருக்­கும் இறுதி முடிவு.

"அம்னோ கட்­சி­யி­ன­ருக்கு இடை­யி­லும் தேசிய முன்­னணி கூட்­ட­ணிக்கு இடை­யி­லும் விரி­சலை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் சில எதிர்க்­கட்­சி­கள் வதந்­தி­க­ளைப் பரப்பி வரு­கின்­றன.

"எங்­க­ளைப் பற்றி குறை சொல்ல எது­வும் இல்­லா­த­தால் இத்­த­கைய உத்­தியை அவை கடைப்­பி­டிக்­கின்­றன," என்று பாகான் டத்தோ அம்னோ பிரி­வைத் திறந்­து­வைத்த பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் திரு ஸாஹிட் கூறி­னார்.

இதற்கு முன்பு, தேசிய கூட்­டணி தேர்­த­லில் வெற்றி பெற்­றால் திரு ஸாஹிட் பிர­த­ம­ரா­கப் பதவி வகிப்­பார் என்ற பேச்சு நில­வி­யது.

இந்­நி­லை­யில், பள்­ளிப் பரு­வத்­தி­லி­ருந்து திரு ஸாஹிட்டை நன்கு தெரி­யும் என்­றும் தங்­க­ளுக்கு இடையே எவ்­வித பிரச்­சி­னை­யும் இல்லை என்­றும் திரு இஸ்­மா­யில் நேற்று தெரி­வித்­தார்.

"நாங்­கள் இரு­வ­ரும் ஒற்­று­மை­யு­டன் இருக்­கி­றோம். நாங்­கள் பிரிய வேண்­டும் என்­பதே எதிர்க்­கட்­சி­க­ளின் விருப்­பம். அவ்­வாறு நிகழ்ந்­தால் எதிர்க்­கட்­சி­க­ளுக்கு லாபம்.

மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லில் தேசிய முன்­னணி வாகை சூட, நாங்­கள் ஒற்­று­மை­யு­டன் இருப்­பது அவ­சி­யம். எதிர்க்­கட்­சி­கள் விரிக்­கும் வலை­யில் விழா­மல் இருக்க வேண்­டும். எதிர்க்­கட்­சி­கள் கூறு­வதை நம்­பி­னால் தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கிக்­கொள்­வோம்," என்று தமது கட்­சி­யி­ன­ரி­டம் திரு இஸ்­மா­யில் கூறி­னார்.

அதே சம­யம் அம்­னோ­வுக்­கும் பாஸ் கட்­சிக்­கும் இடையே விரி­சல் ஏற்­ப­டக்­கூ­டாது என்­றார் அவர். எதிர்­கா­லத்­தில் இரு கட்­சி­களும் மீண்­டும் இணைந்து செயல்­படும் வாய்ப்­பு­கள் இருப்­ப­தாக திரு இஸ்­மா­யில் தெரி­வித்­தார்.

ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தூற்­றிக்­கொள்­ளக்­கூ­டாது என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இரு கட்­சி­களும் முவா­ஃபா­காட் நேஷ­னல் கூட்­ட­ணி­யில் ஒன்­றா­கச் செயல்­பட்­டதை அவர் நினை­வு

ப­டுத்­தி­னார்.