மூவாரில் சயீது சாதிக்கின் பிரசார உரை தடைப்பட்டது

மூவார்: ஜோகூர் மாநி­லத்­தின் மூவார் நக­ரத்­தில் மூடா கட்சி நேற்று முன்­தி­னம் மாலை பிர­சா­ரம் நடத்­தி­யது.

அதில் அக்­கட்­சி­யின் தலை­வ­ரும் எதிர்க்­கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சயீது சாதிக் சயீது அப்­துல் ரஹ்­மான் பேசி­ய­போது இளை­யர்­கள் சிலர் இடை­யூறு விளை­வித்­த­னர். கறுப்பு ஆடை­கள் அணிந்து மோட்­டார் சைக்­கி­ளில் வந்த அந்­தக் கும்­பல், திரு சயீது சாதிக் பேசு­வ­தைத் தடுத்து நிறுத்த முயன்­றது. பிர­சா­ரக் கூட்­டம் தொடங்­கி­ய­தி­லி­ருந்து அந்­தக் கும்­பல் அங்கு இருந்­தது. ஆனால் திரு சயீது சாதிக் பேசத் தொடங்­கி­யதும் அவ­ரைத் தூற்­றும் வகை­யில் அந்­தக் கும்­பல் முழக்­க­மிட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, பிர­சார மேடை­யில் ஏற அந்­தக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் முயன்­ற­தால் அவ்­வி­டத்­தில் பதற்­றம் நில­வி­யது.

அங்­கி­ருந்­த காவல்­துறை அதி­கா­ரி­களும் மூடா கட்­சி­யி­ன­ரும் அவர்­க­ளைத் தடுத்து நிறுத்­தி­னர்.

மேடை மேல் ஏற முடி­யா­மல் போன­தைத் தொடர்ந்து, பிர­சா­ரத்­துக்கு இடை­யூறு விளை­விக்­கும் வகை­யில் தங்­கள் மோட்­டார் சைக்­கிள்­களை மிக சத்­த­மாக அவர்­கள் இயக்­கி­னர்.

இருப்­பி­னும், காவல்­துறை அதி­கா­ரி­கள் அங்கு இருந்­த­தால் நிலைமை கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!