தாய்லாந்தில் வெள்ள அபாயம்; அதிகாரிகள் எச்சரிக்கை

தாய்லாந்தில் வெள்ள அபாயம்; அதிகாரிகள் எச்சரிக்கை

1 mins read
0e9e3723-cc58-430e-974c-126610fc7c1a
-

பேங்­காக்: தாய்­லாந்­தின் தெற்கு மாநி­லங்­களில் திடீர் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று அந்­நாட்டு அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அவ்­வி­டங்­களில் இவ்­வா­ரம் கூடு­தல் கன­மழை பெய்­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

தாய்­லாந்­தின் பல மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. அதி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­குள் நிலைமை மோச­ம­டை­யக்­கூ­டும் என்ற அச்­சம் நில­வு­கிறது.

சுற்­றுப்­ப­ய­ணி­க­ளி­டையே பிர­ப­ல­மான புக்­கெட் தீவில் திடீர் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் ஏற்­பட்ட திடீர் வெள்­ளத்­தால் அங்கு போக்­கு

­வ­ரத்­தும் சுற்­றுப்­ப­ய­ணி­களை நம்­பி­யி­ருக்­கும் வர்த்­த­கங்­களும் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டன.

வெள்­ளத்­தில் சிக்­கித் தவித்­தோரை மீட்­கும் பணி­யில் தாய்­லாந்­துக் கடற்­படை அதி­கா­ரி­கள் இறங்­கி­னர். வெள்­ளம் கார­ண­மாக கிட்­டத்­தட்ட 450,000 வீடு­கள் பாதிக்­கப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.