கோலாலம்பூர்: நீதிமன்ற அவ
மதிப்புக்காக ஜோ லோ எனப்படும் லோ டேக் ஜோவுக்கும் அவரது தந்தையான லேரி லோவுக்கு மலேசிய உயர் நீதிமன்றம் நேற்று சிறைத் தண்டனை விதித்தது. தீர்ப்பளிக்கப்பட்டபோது ஜோ லோவும் அவரது தந்தையும் நீதிமன்றத்தில் இல்லை.
1எம்டிபி மோசடி தொடர்பாக ஜோ லோவை மலேசிய அதிகாரி கள் தேடுகின்றனர்.
அவர் மலேசியாவிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருக்கி றார்.
கடந்த மார்ச் மாதத்தில், ஜோ லோவும் அவரது தந்தையும் அவர்களது சொத்துகளை விற்க முடியாது என்று தடை விதிக்கப்பட்டது. இருவரும் மாதத்துக்குத் தலா 20,000 ரிங்கிட் ($6,500) மட்டுமே செலவு செய்ய முடியும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
இந்தத் தடைக்கு உட்பட்டு நடக்க இருவரும் தவறியதை அடுத்து, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

