இந்தோனீசியாவுக்கு சென்றுகொண்டிருந்த துருக்கிய விமானம் ஒன்று மலேசியாவில் அவசரமாகத் தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மது அருந்திவிட்டு விமான சிப்பந்திகளுடன் சண்டை போட்டுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பயணி ஒருவர் விமானத்தில் கூச்சல் போட்டுக்கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. அவரை நிதானப்படுத்த முயன்ற சிப்பந்தி ஒருவரின் விரலை அவர் கடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரைக் கட்டுப்படுத்த சிப்பந்திகள் முயன்றனர். சிப்பந்திகளை அவர் கையால் குத்தியும் உதைத்தும் உள்ளார்.
கைகலப்பு காரணத்தினால் ஜகார்த்தாவுக்குச் செல்லவேண்டிய விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கியது. இச்சம்பவம் குறித்து இந்தோனீசியா அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.