வாக்களிக்க அழைப்பு; தீவிரம் காட்டும் கட்சிகள்

வாக்களிக்க அழைப்பு; தீவிரம் காட்டும் கட்சிகள்

3 mins read
d7836233-2d60-40f9-b57f-191aa5606c81
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­லுக்­கான தேதியை அந்­நாட்­டின் தேர்­தல் ஆணை­யம் இன்­னும் அறி­விக்­க­வில்லை.

அதற்கு முன்­பா­கவே வாக்­காளார்­களை ஈர்க்­கும் பணி­யில் கட்­சி­கள் தீவி­ரம் காட்டி வரு­கின்­றன.

வெளி­நா­டு­களில் அல்­லது வேறு மாநி­லங்­களில் இருக்­கும் மலே­சிய வாக்­கா­ளர்­க­ளைத் தங்­கள் சொந்த தொகு­திக்­குத் திரும்பி வாக்­க­ளிக்­கு­மாறு அர­சி­யல் கட்­சி­களும் அரசு சார்­பற்ற அமைப்­பு­களும் ஊக்­கு­விக்­கின்­றன.

தேர்­த­லில் வாக்­க­ளிக்க வெளி­நா­டு­களில் இருக்­கும் மலே­சி­யர்­

க­ளால் சொந்த நாட்­டுக்­குத் திரும்ப முடி­யாத நிலை ஏற்­பட்­டால் அவர்­கள் தபால் மூலம் வாக்­க­ளிக்க ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.

அது­மட்­டு­மில்­லாது, வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்கு வாக்­கா­ளர்­களை அழைத்­துச் செல்ல கார் பகிர்­வுத் திட்­டத்­தை­யும் அவை வழங்­கு­கின்­றன.

தேர்­தல் ஆண்­டி­று­தி­யில் நடத்­தப்­ப­டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அப்­போது மலே­சி­யா­வில் பரு­வ­ம­ழைக்­கா­லம் என்­ப­தால் பல மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­ப­டக்­கூ­டும் என்று முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்­ளம் ஏற்­பட்­டா­லும் பய­ணம் செய்­யக்­கூ­டிய 'ஃபோர் வீல் டிரைவ்' வாக­னங்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­பட்­டுள்­ளது.

வெள்­ளம் கார­ண­மாக வாக்­கா­ளர்­கள் பல­ரால் வாக்­க­ளிப்பு மையங்­க­ளுக்­குச் செல்ல முடி­யாத நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

வாக்­க­ளிக்க வரு­மாறு முந்­திய தேர்­தல்­களில் எதிர்க்­கட்­சி­கள்

மட்­டுமே அழைப்பு விடுக்கும். இம்­முறை பினாங்கு மாநி­லத்­தில் தேசிய முன்­ன­ணி­யும் அப்­ப­ணியை முடுக்­கி­விட்­டுள்­ளது.

பினாங்கு மாநி­லம் எதிர்க்­கட்­சி­யான பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கிறது. அதை எப்­ப­டி­யும் கைப்­பற்ற வேண்­டும் என்ற முனைப்­பு­டன் அம்­மா­நி­லத்­தி­ன் தேசிய

முன்­னணி தலை­வர் மூசா ஷேக் ஃபாட்சிர் இருக்­கி­றார்.

தனது மக­ளிர் அணிக்­குச் சொந்­த­மான தொலை­பேசி அழைப்பு மையங்­கள், சமூக ஊட­கம் ஆகி­ய யவை மூலம் வாக்­கா­ளர்­க­ளு­டன் தொடர்­பு­கொள்ள பினாங்கு தேசிய முன்­னணி திட்­ட­மிட்­டுள்­ளது.

வெளி­நா­டு­களில் கல்வி பயி­லும், வேலை செய்­யும் மலே­சி­யர்­கள் தங்­களை வாக்­கா­ளர்­க­ளா­கப் பதிவு செய்­யத் தேவை­யான அனைத்­தை­யும் செய்­வ­தாக பாஸ் கட்­சி­யின் இளை­யர் அணித் தலை­வர் அக­மது ஃபாட்லி ஷாரி கூறி­னார். சமூக ஊட­கத்­தைப் பயன்­ப­டுத்­து­வது மட்­டு­மல்­லாது, பிர­சா­ரம் செய்ய மலே­சி­யர்­கள் அதி­கம் இருக்­கும் ஒவ்­வொரு வெளி­நாட்­டுக்­கும் தமது கட்­சிப் பிர­தி­நி­தி­களை அனுப்ப இருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­வார் இப்­ரா­ஹிம் வாக்­கா­ளர்­க­ளைச் சென்று சந்­திப்­ப­தா­க­வும் நாட்டை முன்­னேற்­றப் பாதைக்­குக் கொண்டு செல்ல சரி­யான, தர­மான தலை­வர்­க­ளைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டும் என்று அவர்­க­ளி­டம் அவர் வலி­யு­றுத்­து­வ­தா­க­வும் கெடா

மாநி­லத்­தின் பக்­கத்­தான் ஹரப்­பான் தலை­வர் ஜொஹாரி அப்­துல் தெரி­வித்­தார்.

அனைத்து சமூக ஊட­கத் தளங்­கள் வாயி­லாக வாக்­கா­ளர்­க­ளு­டன் தமது கட்சி தொடர்­பு­கொண்டு பிர­சா­ரம் செய்­வ­தாக மூடா கட்­சி­யின் ஊடகத் தொடர்புத் தலை­வர் லெபன் சித்­தார்த் கூறி­னார்.

இதற்­கி­டையே, முன்பு போல தேர்­தல்­களில் எளி­தாக வெற்றி பெற முடி­யாது என்று மலே­சி­யப் பிர­த­ம­ரும் அம்­னோ­வின் உத­வித் தலை­வ­ரு­மான திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, அறு­திப் பெரும்­பான்­மை­யு­டன் வெற்றி பெற அம்னோ தலை­மை­யி­லான தேசிய முன்­னணி கடு­மை­யாக உழைக்க வேண்­டும் என்று அவர் கூறி­னார்.

"காலம் மாறு­கிறது. நம்­பிக்கை மட்­டும் இருந்­தால் போதாது. இதை 14வது பொதுத் தேர்­தல் எங்­க­ளுக்கு உணர்த்­தி­யது," என்று அவர் தெரி­வித்­தார்.

2018ஆம் ஆண்­டில் நடை­பெற்ற தேர்­த­லில் தேசிய முன்­ன­ணியை பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­டணி தோற்­க­டித்து ஆட்­சி­யைப் பிடித்து வர­லாறு படைத்­தது.

இருப்­பி­லும், பக்­கத்­தான் ஹரப்­பான் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர் கட்சி தாவி­ய­தால் பக்­கத்­தான் ஹரப்­பான் அர­சாங்­கம் கவிழ்ந்­தது. 2020ஆம் ஆண்­டில் தேசிய முன்­னணி மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தது.

இந்­நி­லை­யில், மலே­சி­யர்­கள் விரும்­பி­னால், தேவை ஏற்­பட்­டால் மூன்­றா­வது முறை­யாக மலே­சி­யா­வின் பிர­த­ம­ரா­கப் பதவி ஏற்­கத் தயா­ராக இருப்­ப­தாக 97 வயது டாக்­டர் மகா­தீர் முகம்­மது தெரி­வித்­துள்­ளார்.

டாக்­டர் மகா­தீர் தனது லங்­காவி தொகு­தி­யைத் தற்­காத்து தேர்­த­லில் போட்­டி­யிட இருக்­கி­றார்.