பாதுகாப்பை மேம்படுத்துவோம்; ஜோக்கோவி, ஃபிஃபா சூளுரை

பாதுகாப்பை மேம்படுத்துவோம்; ஜோக்கோவி, ஃபிஃபா சூளுரை

1 mins read
d21c47ec-0626-457e-8936-a12d7f28e17a
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் உள்ள விளை­யாட்­ட­ரங்­கங்­களில் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் மேம்­ப­டுத்­தப்­படும் என்­றும் அது­

தொ­டர்­பாக மறு­ஆய்வு செய்­யப்­படும் என்­றும் இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வும் அனைத்­து­ல­கக் காற்­பந்­துச் சம்­மே­ள­னத்­தின் (ஃபிஃபா) தலை­வர் ஜியானி இன்­ஃபேன்­டி­னோ­வும் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் அந்­நாட்­டில் உள்ள விளை­யாட்­ட­ரங்­கம் ஒன்­றில் நிகழ்ந்த கூட்ட நெரி­ச­லின் கார­ணத்­தால் 130க்கும் அதி­க­மா­னோர் மாண்­ட­னர்.

அத்­த­கைய சம்­ப­வம் மீண்­டும் நிக­ழா­தி­ருக்க கூட்­டுப் பணிக்­குழு ஒன்றை அமைக்க இந்­தோ­னீ­சி­யா­வும் ஃபிஃபாவும் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன.

அடுத்த ஆண்டு 20 வய­துக்கு உட்­பட்­டோ­ருக்­கான உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டியை இந்­தோ­னீ­சியா ஏற்று நடத்த இருக்­கிறது.

இதற்­கி­டையே, கூட்ட நெரி­சல் கார­ண­மாக 130க்கும் அதி­க­மா­னோர் மாண்ட விளை­யாட்­ட­ரங்­கம் இடிக்­கப்­பட்டு மீண்­டும் கட்­டப்­படும் என்று அதி­பர் ஜோக்கோ விடோடோ தெரி­வித்­தார்.