விளையாட்டுச் செய்திகள்

பிரான்சின் கரீம் பென்சிமா

தட்டிச்சென்ற உயரிய விருது

விருது வென்ற மகிழ்ச்சியைத் தமது தாயாருடன் பகிர்ந்துகொண்ட கரீம் பென்சிமா. படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: காற்பந்து உலகின் ஆக உயரிய விருதுகளில் ஒன்றான பெலண்டோர் விருதை பிரெஞ்சு ஆட்டக்காரரும் ரியால் மட்ரிட்டின் நட்சத்திர வீரருமான கரீம் பென்சிமா வென்றுள்ளார்.

அவரது அசத்தலான ஆட்டம் காரணத்தினால் கடந்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக், லா லீகா ஆகிய காற்பந்துப் போட்டிகளில் ரியால் மட்ரிட் கிண்ணங்களை ஏந்தியது.

1998ஆம் ஆண்டில் ஸினடின் ஸிடான் இவ்விருதை வென்றார். அதை அடுத்து, இவ்விருதை வென்ற முதல் பிரெஞ்சு ஆட்டக்காரர் எனும் பெருமை பென்சிமாவைச் சேரும்.

இந்த விருதை அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி ஏழு முறையும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறையும் வென்றுள்ளனர்.

நெய்மார் சாட்சியம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

பார்சிலோனா: ஊழல் வழக்கில் பிரேசில் காற்பந்து நட்சத்திரம் நெய்மார், ஸ்பானிய நீதிமன்றத்தில் சாட்சியம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிய லீக் ஜாம்பவானான பார்சிலோனாவில் அவர் இணைந்தபோது நடந்த பரிவர்த்தனைகளில் முறைகேடு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாண்டு இறுதியில் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெற இருப்பதால் வழக்கு விசாரணை நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே நடத்தப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை முயற்சி;

விசாரணைக் காவலில் கிரீன்வுட்

மான்செஸ்டர்: பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் மான்செஸ்டர் யுனைடெட் ஆட்டக்காரர் மேசன் கிரீன்வுட் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் கட்டுப்படுத்தியதாகவும் கட்டாயப்படுத்தியதாகவும் அடித்துத் துன்புறுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 21ஆம் தேதியன்று கிரீன்வுட் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!