சிகாகோ: மிக மோசமான பறவைக் காய்ச்சலால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுள்ளது.
கிருமி காரணமாக அங்கு பல கோழிகளும் வான்கோழிகளும் மடிந்துவிட்டன. மடிந்த பறவை
களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவை எட்டக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கிருமித்தொற்று ஏற்பட்டு மடிந்த, கிருமித்தொற்று ஏற்பட்டதால் கொல்லப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை 47 மில்லியனுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

