இஸ்தான்புல்: துருக்கியின் கெப்போடோக்கியா நகரில் வானத்தில் பறந்துகொண்டிருந்த வெப்பக் காற்று பலூன் திடீரென நிலத்தில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு ஸ்பானியர்கள் மாண்டனர். விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.
திடீரென பலத்த காற்று வீசியதால் விபத்து ஏற்பட்டதாகத் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்தபோது அந்த வெப்பக் காற்று பலூனில் 28 சுற்றுப்பயணிகளும் இரு சிப்பந்திகளும் இருந்தனர்.

