இலங்கை உள்நாட்டு போர் பற்றிய நாவலுக்கு உயரிய விருது

பிரிட்டனின் உயரிய நாவல் விருதை இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா வென்றுள்ளார். இவர் எழுதிய “The Seven Moons of Maali Almeida” எனும் நாவல் இவ்வாண்டுக்கான புக்கர் பரிசை வென்றது.

பிரிட்டிஷ் மன்னரின் மனைவியிடம் கருணாதிலகா பரிசை பெற்றார். பரிசைப் பெற்று உரையாற்றிய அவர், ஊழல், தகுதியற்றவர்களை முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்வது, இனவெறி போன்றவவை ஒரு போதும் நிலைக்காது என்று இலங்கை உணரவேண்டும் என்று தான் நம்புவதாக கூறினார்.

போர்க்கால புகைப்பட கலைஞரான மாலி அல்மெடா எனும் புனை கதாபாத்திரம் தான் மாண்ட பின்னர், உள்நாட்டு போரால் மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளை வெளிப்படுத்த முயற்சி செய்வதே கதையின் சாராம்சமாகும்.

இலங்கை உள்நாட்டு போரில் சுமார் 100,000 பேர் மாண்டனர். கிட்டத்தட்ட 40,000 தமிழர்களை இலங்கை இராணுவ படைகள் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுவரை போர்க்கால குற்றங்களை விசாரிக்க இலங்கை அரசாங்கம் மறுத்துவருகிறது.

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளருக்கு புக்கர் பரிசு வழங்கப்படுவது இது இரண்டாவது முறை. 1992ல் இலங்கையில் பிறந்த கனடாவைச் சேர்ந்தவருக்கு இந்தப் பரிசு அளிக்கப்பட்டது.

இலங்கை தலைநகர் கொழும்பில் “The Seven Moons of Maali Almeida” எனும் நாவல் விற்றுதீர்ந்ததாகக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!