திரவ மருந்து வகைகளுக்கு இந்தோனீசியா தடை

திரவ மருந்து வகைகளுக்கு இந்தோனீசியா தடை

1 mins read
bd1441e6-0ae9-468a-bcc6-475ee719f3e0
-

ஜகார்த்தா: திரவ வடி­வில் இருக்­கும் எல்லா மருந்து வகை­களுக்­கும் இந்­தோ­னீ­சிய அர­சாங்­கம் தற்­கா­லி­கத் தடை விதித்­துள்­ளது. மருத்­து­வ­ரின் அனு­ம­தி­யு­டன் மட்­டும் வாங்­கப்­படும் மருந்து, சாதா­ர­ண­மா­கக் கடை­களில் விற்­கப்­படும் மருந்து ஆகிய இரு­வகை மருந்­து­க­ளுக்­கும் தடை பொருந்­தும்.

வழக்­கத்­துக்கு மாறாக இந்­தோ­னீ­சி­யா­வில் இவ்­வாண்டு மோச­மான சிறு­நீர் பிரச்­சி­னைக்கு ஆளான 100க்கும் மேற்­பட்ட சிறு­வர்­கள் மாண்­ட­தைத் தொடர்ந்து தடை விதிக்­கப்­பட்­டது. அந்­நாட்­டில் இப்­பி­ரச்­சி­னைக்கு ஆளான சிறு­வர்­களில் பலர் ஐந்து வய­துக்­குக்­கீழ் உள்ள குழந்­தை­கள்.