யங்கூன்: மியன்மாரின் ஆகப் பெரிய சிறைச்சாலையில் நிகழ்ந்த வெடிப்புகளில் குறைந்தது எட்டு பேர் மாண்டனர், பலர் காயமடைந்தனர்.
மூன்று அதிகாரிகளும் சிறைக்கு வருகை தந்த ஐவரும் இன்செயின் சிறையில் ஏற்பட்ட வெடிப்புகளில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.40 மணிக்கு இருமுறை வெடிப்பு நிகழ்ந்ததென சுயேச்சையாக இயங்கும் 'மியன்மார் நவ்' செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
ஆகக் கடைசி நிலவரப்படி வெடிப்புகள் எவ்வாறு நேர்ந்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.

