மலேசியப் பொதுத் தேர்தல்: நவம்பர் 19

மலேசியப் பொதுத் தேர்தல்: நவம்பர் 19

1 mins read
6888354a-1972-4ba8-be43-036043ee5758
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

மலேசியாவில் பொதுத் தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 14 நாள் தேர்தல் பிரச்சாரம் இடம்பெறும்.

20 மில்லியனுக்கு மேற்பட்ட மலேசியர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அக்டோபர் 10ஆம் தேதி அறிவித்தார். நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்ட 60 நாள்­க­ளுக்­குள், பொதுத் தேர்­தல் நடத்­தப்­பட வேண்­டும்.