பெரும்பாலான ஆண்கள் தங்களைவிட வயது குறைவாக இருக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தன் மனதுக்கு பிடித்த பெண் தன்னைவிட கிட்டத்தட்ட 40 வயது அதிகம் என்றபோதிலும் அவரை கல்யாணம் செய்துகொள்ள விரும்புகிறார் 19 வயது இளையர் ஒருவர். தாய்லாந்தில் சாக்கோன் நாக்கோன் எனும் மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தாராஜ். இவருடைய அண்டைவீட்டுக்காரர் நமுவான்கிராக் எனும் 56 பெண். தன்னுடைய வீட்டைச் சுத்தம் செய்வதற்காக சந்தாராஜின் உதவியை அவர் நாடியுள்ளார். இதனால் இளையர் நமுவான்கிராக்கின் வீட்டுக்கு அடிக்கடி சென்றார்.
இருவரிடையே நட்பு உருவானது. ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டபின், காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகள் தம்பதியாக உள்ளனர். இருவரிடையே 37 ஆண்டு இடைவெளி இருந்தாலும், இருவரும் காதலில் உள்ள மற்ற தம்பதிகள் போன்றே பழகுகின்றனர்.
நமுவான்கிராக் உழைப்பாளி, நேர்மையானவர் என்று சந்தாராஜ் கூறுகிறார். பதிலுக்கும் சந்தாராஜ் தன்னை மீண்டும் இளமையாக உணரவைப்பதாக நமுவான்கிராக் சொல்கிறார்.
தங்கள் உறவைப் பற்றி மற்றவர்களிடம் தெரிவித்தபோது, தங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று பலரும் கூறியதாக இருவரும் குறிப்பிட்டனர். சமூகம் என்ன சொன்னாலும், தங்களுக்குக் கவலை இல்லை என்கின்றனர்.
தாங்கள் இருவரும் கூடியவிரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக மிகுந்த மகிழ்ச்சியுடம் அவர்கள் தெரிவித்தனர்.

