பெய்ஜிங்: சீனா கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயத் தனிமையில் வைக்கப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கை மற்ற நாடு களிடம் இருந்து சீனாவை பிரித்து வைத்துள்ளது. இவ்வேளையில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைப்பது குறித்து சீன உயர் அதிகாரிகள் விவாதித்து வருகின்றனர்.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தும் காலத்தை ஹோட்டலில் இரண்டு நாள்களாகவும் வீட்டில் ஐந்து நாள் களாகவும் மாற்றுவது குறித்து அதிகாரிகள் தனிப்பட்ட வகையில் பரிசீலிக்கின்றனர் என்று அடையாளம் தெரிவிக்காத அவ்வட்டாரத்துக்கு நன்கு பரிச்சயமான ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சீனாவுக்குள் நுழை பவர்கள் பத்து நாள்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். ஹோட்டலில் ஏழு நாள்களும் வீட்டில் மூன்று நாள்களும் தங்க வேண்டும். வீட்டில் தங்கும்போது வழக்கமான கொவிட்-19 பரிசோதனை களை செய்ய வேண்டும்.
ஆனால் புதிய கட்டுப்பாடுகள் குறித்து தெளிவான விவரம் இல்லை. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் எப்படி பொருந்தும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையே சீனாவின் தலை நகர் பெய்ஜிங்கில் கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பொதுச் சுகாதார சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அண்மையில் தொற்று நான்கு மடங்கு அதிகரித்துள்ளதால் சில குடியிருப்பு வளாகங்கள் மூடப்பட்டன.
கம்யூனிசக் கட்சி மாநாடு தற்போது நடைபெற்று வருவதால் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப் படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுமார் 21 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெய்ஜிங்கில் புதன்கிழமை அன்று மட்டும் உள்ளூரில் பரவிய 18 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவற்றுடன் கடந்த பத்து நாள்களில் தொற்றுச் சம்பவங்கள் 197க்கு அதிகரித்துள்ளன.
அதாவது இதற்கு முந்தைய பத்து நாளில் கண்டறியப்பட்ட 49 தொற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் அது தற்போது நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.

