ஹாங்காங்கில் மாநாடு; வங்கி அதிகாரிகளுக்கு சலுகை
உக்ரேனில் மின்சார பயன்பாட்டை குறைக்க உத்தரவு
கீவ்: ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் மின்சாரப் பயன்பாட்டை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரேனின் எரிசக்தி நிலையங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்கி வருகிறது. இதனால் அனைத்து சாதனங்களுக்கும் மின்னேற்றி வையுங்கள் என்று உக்ரேனிய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
ஈரானில் இளையர்
சுட்டுக் கொலை
டெஹ்ரான்: ஈரானில் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு இளையர் ஒருவர் உயிரிழிந்தததாக தகவல் வெளியாகி உள்ளது. அடோல்ஃபாஸி அடினஸாடே, 17, பள்ளிக்குச் செல்லாமல் அக்டோபர் 8ஆம் தேதி அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. ஈரானிய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டதாக பிபிசி தகவல் தெரிவிக்கிறது. மூன்று அடி தூரத்தில் மிக நெருக்கமாக இளையர் சுடப்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் மருத்துவர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி பிரமுகரை
நசுக்க ஹுன்சென் சூளுரை
நோம் பென்: நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சி பிரமுகரான சாம் ரெயின்சியை நசுக்க கம்போடிய பிராதமர் ஹுன் சென் சூளுரைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கம்போடியாவை கடந்த 37 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹுன் சென், தனது அரசியல் எதிரிகளை நசுக்கி வருகிறார். தனக்குப் பிறகு தனது மகன் ஹுன் மானெட்டை பிரதமராக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

