நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த ஆண்டு முதல் தீபாவளி பண்டிகை அன்று பள்ளிகௌக்கு விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரில் வசித்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தீபாவளிக்கு பொது விடுமுறை வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதனை ஏற்று அடுத்த ஆண்டு முதல் (2023) தீபாவளித் திருநாள் அன்று பள்ளிகளுக்கு பொது விடுமுறை அளிக்கப்படும் என நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது தீபாவளித் திருநாள் என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன். இதனால் பள்ளி குழந்தைகள் தீபாவளி தீபத் திருநாள் குறித்து அறிவதற்கு ஊக்க மளிக்கும் வகையில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்லால் நியூயார்க் மேயருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

