இங்கிலாந்தின் அடுட்ஹ்த பிரதமராக வர இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு அதிக வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, அதன் பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியிலிருந்து திடீரென விலகிக்கொண்டார்.
தம்மைத் தேர்வு செய்ததற்கான இலக்கை அடைய முடியாததால் பதவி விலகல் செய்வதாக்அ என லிஸ் டிரஸ் கூறியிருந்தார்.
பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை விலகியதால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என லிஸ் டிரஸ் தெரிவித்துள்ளார்.

