பொதுமக்களின் தர்ம அடியிலிருந்து தப்பிக்க காவலர்களின் உதவியை நாடிய திருடன்

பொதுமக்களின் தர்ம அடியிலிருந்து தப்பிக்க காவலர்களின் உதவியை நாடிய திருடன்

1 mins read
2ec92f67-ca0b-4561-8942-9f940a92dcfc
பங்ளாதேஷ். கோப்புப்படம் -

பங்ளாதேஷ்: திருடன் ஒருவன் திருட்டுச் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மக்களிடம் பிடிபடாமல், தப்பிக்க காவலர்களின் உதவியை நாடியுள்ளான்.

நாற்பது வயதான யாசின் கான் பங்ளாதேஷின் பரிசல் நகரத்தில் உள்ள மளிகைக் கடையில் புதன்கிழமை காலையில் திருட முயன்றதாக காவல் துறை அதிகாரி அசாத் உஸ் சமான் கூறினார்.

திருடியதற்கு பின் தப்பிக்கும் போது, வெளியில் ஆள் நடமாட்டத்தை கவனித்தான் என்று காவல் அதிகாரி வெள்ளிக்கிழமை அன்று ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

காலை வேளையில், கடும் சினத்தோடு மக்கள் கூட்டம் வெளியே நிற்பதை கண்டு கான் பயந்துவிட்டான். அவன் காவல் அவசர சேவைக்கு தொடர்பு கொண்டு, தம்மை காப்பாற்றும்படி மன்றாடினான்.

காவலர்கள் அவனை பத்திரமாகக் கடையில் வைத்து கைது செய்தனர். கும்பல் திருடனை ஒன்றும் செய்யவில்லை என்றார் காவல் அதிகாரி சமான். இப்படிப்பட்ட சம்பவத்தை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கானிடம் பை நிறைய திருடப்பட்ட பொருள்கள் இருந்தும், தப்பிக்க முடியவில்லை என்று கடையின் உரிமையாளர், திரு ஜோண்டு மியா கூறினார்.