ஜோகூர் முதல்வர் மறுப்பு

ஜோகூர் முதல்வர் மறுப்பு

2 mins read
1fbace3f-fa57-4751-a141-da994d12023e
-

சிங்கப்பூரிலிருந்து வாக்களிக்க வரும் மலேசியர்களைத் தடுக்க முயல்வதாக வெளியான தகவல்

ஜோகூர் பாரு: பொதுத் தேர்­த­லில் வாக்­க­ளிப்­ப­தற்­காக சிங்­கப்­பூ­ரில் இருந்து வரும் மலே­சி­யர்­க­ளைத் தடுக்­கும் முயற்­சி­யா­கவே ஜோகூர் பாரு சோத­னைச்­சா­வ­டி­யில் தானி­யக்­கக் கதவு மேம்­பாட்­டுப் பணி­கள் இடம்­பெ­று­வ­தாக வெளி­யான தக­வலை ஜோகூர் முதல்­வர் ஒன் ஹஃபிஸ் காஸி மறுத்­துள்­ளார்.

சிங்­கப்­பூ­ருக்­கும் மலே­சி­யா­விற்­கும் இடையே பய­ணம் செய்­வதை எளி­தாக்­கவே ஜோகூர் அர­சாங்­கம் விரும்­பு­கிறது என்று திரு ஹஃபிஸ் குறிப்­பிட்­டார்.

மாறாக, ஜோகூர் பாரு சோத­னைச்­சா­வடி கடப்­பி­தழ் அனு­ம­திக்­கான தானி­யக்­கக் கத­வு­க­ளைச் செயல்­ப­டா­மல் முடக்­கும் நட­வ­டிக்­கை­யின் பின்­ன­ணி­யில் அம்னோ இருப்­ப­தா­கக் கூறு­வது பொய்­யான தக­வல் என்று அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரி­லுள்ள மலே­சி­யர்­கள் தேர்­த­லில் வாக்­க­ளிக்க நாடு திரும்பு­வ­தைத் தடுக்­கும் வித­மாக, பங்­கு­னான் சுல்­தான் இஸ்­கந்­தர் சுங்க, குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி­யில் உள்ள தானி­யக்­கக் கத­வு­க­ளின் செயல்­பாட்­டைத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைத்து, அம்னோ கீழ்த்­த­ர­மான தந்­தி­ரங்­களில் ஈடு­படு­கிறது என்று சமூக ஊட­க­மொன்­றில் வெளி­யான ஒரு பதிவு குற்­றம் சாட்­டி­யி­ருந்­தது.

தானி­யக்­கக் கத­வு­களை முடக்கி­வைப்­ப­தன்­மூ­லம், கடப்­பி­தழ் அனு­மதி பெற குடி­நுழைவு, சோத­னைச்­சா­வ­டி­யில் நீண்ட வரி­சை­யில் காத்­தி­ருக்க நேரி­டும் என்று அப்­ப­திவு குறிப்­பிட்­டி­ருந்­தது.

அது­பற்­றிக் கேட்­ட­தற்கு, இரு­நா­டு­க­ளுக்கு இடையே மக்­கள் நட­மாட்­டத்­தைத் தடுக்க அர­சாங்­கம் ஒரு­போ­தும் விரும்­பாது என்ற முதல்­வர் ஹஃபிஸ், தானி­யக்­கக் கத­வு­கள் மேம்­ப­டுத்­தப்­ப­டு­வ­தன் ­மூ­லம் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து மலே­சி­யர்­கள் நாடு­தி­ரும்­பு­வது தடுக்­கப்­படும் என்ற தக­வ­லை­யும் அடி­யோடு மறுத்­தார்.

ஜோகூர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரான முகம்­மது ஃபஸ்லி முகம்­மது சாலே­வும் முதல்­வர் ஹஃபிஸின் கருத்தை எதி­ரொ­லித்­தார்.

"தானி­யக்­கக் கத­வு­களை மேம்­படுத்­து­வ­தற்­கான பணி­கள் கடந்த மே மாதமே தொடங்­கி­விட்­டன. அவை அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் நிறை­வு­பெ­றும். இந்த மேம்­பாட்­டுப் பணி­கள்­மூ­லம் தானி­யக்கக் கத­வு­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும்," என்று திரு சாலே விளக்­கி­னார்.

அப்­ப­ணி­க­ளுக்­கும் பொதுத் தேர்­த­லுக்­கும் தொடர்­பில்லை என்றும் அவர் சொன்­னார்.

தாம் முதல்­வ­ரா­கப் பத­வி­யேற்­ற­போது ஜோகூர் பாரு குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­யில் 1,200 வேலை உத்­த­ர­வு­கள் நிறை­வேற்­றப்­ப­டா­மல் கிடப்­பில் இருந்­தன என்­றும் இப்­போது அந்த எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட நூறா­கக் குறைந்­து­விட்­டது என்­றும் முதல்­வர் ஹஃபிஸ் தெரி­வித்­தார்.

ஆசி­யா­வின் பர­ப­ரப்­பான குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வ­டி­களில் ஒன்­றான ஜோகூர் பாரு சோத­னைச்­சா­வ­டி­யில் மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­காக அதிக நிதி ஒதுக்­கப்­படும் என்­றும் அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.