'அணையைத் தகர்க்க ரஷ்யா திட்டம்'

'அணையைத் தகர்க்க ரஷ்யா திட்டம்'

1 mins read
be8121d0-e222-42dd-a407-9e2439c224ba
-

கியவ்: ரஷ்யா இணைத்­துக்­கொண்ட கெர்­சானை நோக்கி உக்­ரே­னி­யப் படை­கள் முன்­னே­றிச் செல்லும் நிலை­யில் அங்குள்ள ஒரு நீர்மின் அணை­யைத் தகர்க்க ரஷ்யா திட்­ட­மிட்டிருப்பதாக உக்­ரேன் குற்­றம் சாட்­டி­யுள்­ளது.

கக்­கோவோ நீர்­மின் நிலை­யத்­தைத் தகர்க்­கும் நோக்­கில் ரஷ்­யப் படை­கள் அங்கு வெடி­வைத்­துள்­ளன என்­றும் அத­னால் பேர­ழிவு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் உக்­ரே­னி­யப் பிர­த­மர் வொலோ­டி­மிர் ஸெலன்ஸ்கி கூறி­யி­ருக்­கி­றார்.

அணை தகர்க்­கப்­பட்­டால் லோவர் டினிப்ரோ ஆற்­றோ­ர­மாக வசிக்­கும் நூறா­யி­ரக்­க­ணக்­கான மக்­கள் வெள்ள அபா­யத்­தில் சிக்­கு­வர் என்று ஐரோப்­பி­யத் தலை­வர்­க­ளுக்­கு­முன் நேற்று உரை­யாற்­றி­ய­போது திரு ஸெலன்ஸ்கி அச்­சம் தெரி­வித்­தார்.

தெற்­கில் நீர் விநி­யோ­கத்தை நிறுத்­தி­னால் ஐரோப்­பா­வின் ஆகப் பெரிய ஸப்­போ­ரி­ஸியா அணு­மின் நிலை­யத்­தின் குளிர்­விப்பு அமைப்­பு­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்­றும் அவர் சொன்­னார்.

இத­னி­டையே, உக்­ரே­னிய நக­ரங்­கள் மின்­சா­ரப் பயன்­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்­தத் தொடங்கி உள்­ளன. தொழில் நிறு­வ­னங்­களும் மக்­களும் மின்­சா­ரத்­தைக் குறை­வா­கப் பயன்­படுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளனர். நாட்­டின் மின்­கட்­ட­மைப்பு­மீது ரஷ்யா தாக்­கு­தல் தொடுப்பின் மேலும் பலர் அக­தி­க­ளாக வெளி­யே­றக்­கூ­டும் என்று அதி­காரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.