'ஆர்ஆர்ஆர்' திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய ஜப்பானிய யூடியூப் புகழ் (காணொளி)

'ஆர்ஆர்ஆர்' திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய ஜப்பானிய யூடியூப் புகழ் (காணொளி)

1 mins read
4aec8979-156f-4013-83d1-c73e28f46088
'நாட்டுக்கூத்து' பாடலுக்கு நடனமாடிய பிரபல ஜப்பானிய யூடியூப் புகழ். காணொளிப் படம் -

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் இந்தியாவிலும் உலகெங்கிலும் மாபெரும் வெற்றி கண்டது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக ஜப்பானிலும் 'ஆர்ஆர்ஆர்' மீதான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் நேற்று வெள்ளிக்கிழமை அங்கு வெளியீடு கண்டது.

ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் இத்திரைப்படத்தைப் பிரபலப்படுத்த ஜப்பானுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், இத்திரைப்படத்தின் வெற்றிப் பாடலான 'நாட்டுக்கூத்து', ஜப்பான் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரபல ஜப்பானிய யூடியூப் புகழான மேயோ என்பவர், இப்பாடலுக்கான தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புதிய காணொளியில், இப்பாடலுக்கு நடனமாடினார்.

ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகிய மூவரையும் பேட்டி எடுக்கும் வாய்ப்பைப் பெற்ற அவர், அதை முடித்த கையுடன் 'நாட்டுக்கூத்து' பாடலுக்கு தாம் ஆடுவதைக் காட்டும் காணொளியை எடுத்தார். இதில் மேயோவுடைய நண்பரும் சேர்ந்து நடனமாடினார்.