இந்தோனீசியாவில் சமூக அளவில் முதல் எக்ஸ்பிபி தொற்று

இந்தோனீசியாவில் சமூக அளவில் முதல் எக்ஸ்பிபி தொற்று

1 mins read
9ebe12ed-248d-4f0c-8fca-164460d2a299
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் முதன்­மு­றை­யாக சமூக அள­வில் எக்ஸ்­பிபி வகை ஓமிக்­ரான் கிருமித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. கிழக்கு ஜாவா­வில் இருக்­கும் சுரபாயா நக­ரில் 29 வயது பெண்­ணுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்டது.

சென்ற மாதம் 26ஆம் தேதி­யன்று அப்­பெண்­ணுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது தெரி­ய­வந்­த­தென இந்­தோ­னீ­சிய சுகா­தார அமைச்­சின் பேச்­சா­ளர் முகம்­மது சியா­ரில் தெரி­வித்­தார். சுரபா­யா­வில் தனி­மை­யில் இருந்த அப்பெண் இம்­மா­தம் மூன்­றாம் தேதி­யன்று குண­மடைந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

எக்ஸ்­பிபி வகை ஓமிக்­ரான் கிரு­மி­யால் சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ள­தை­யும் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை கூடி­ய­தை­யும் டாக்­டர் சியா­ரில் சுட்­டி­னார். எனி­னும். எக்ஸ்­பிபி வகை கிரு­மிக்கு வேக­மா­கப் பர­வும் ஆற்றல் இருந்­தா­லும் இதர ஓமிக்­ரான் வகை கிரு­மி­களைப் போலவே மர­ணம் விளை­விக்­கும் தன்மை அதனிடம் குறைவு என்­று அவர் குறிப்­பிட்டார்.