பயங்கரவாத நிதியுதவி: கண்காணிப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

பயங்கரவாத நிதியுதவி: கண்காணிப்புப் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கம்

1 mins read
d27e97d0-be0c-4da6-95ff-518d626bc83c
இஸ்லாமாபாத்தில் கலவரத்தைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டைச் சுடும் காவல்துறை அதிகாரி. படம்: ராய்ட்டர்ஸ் -

இஸ்­லா­மா­பாத்: பயங்­க­ர­வா­தி­களுக்கு நிதி­யு­தவி வழங்­கு­வ­தன் தொடர்­பில் கூடு­த­லா­கக் கண்­காணிக்­கப்­படும் அனைத்­து­லக நாடு­கள் பட்­டி­ய­லி­லி­ருந்து பாகிஸ்­தான் நீக்­கப்­பட்­டுள்­ளது. 'எஃப்ஏ­டி­எஃப்' எனும் நிதி நட­வ­டிக்கை செயற்­கு­ழு­வின் தலை­வர் டி. ராஜ குமார் நேற்று முன்­தி­னம் இதைத் தெரி­வித்­தார்.

பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்டுவரும் பாகிஸ்­தா­னுக்கு இந்த முடிவு, பிற­ரி­டையே அந்­நாட்­டைப் பற்­றிய கருத்தை மேம்­ப­டுத்­தக்­கூ­டும் என்று கருதப்படுகிறது. பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­சில் நடை­பெற்ற இரண்டு நாள் சந்­திப்­பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்­கப்­பட்­ட­தா­கத் திரு குமார் கூறி­னார்.

"கள்­ளப் பணத்தை நல்­ல பண­மாக்­கும் செயல்­கள், பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்க வகை­செய்­யும் முறை­கள் ஆகி­ய­வற்­றில் இருந்த குறை­பா­டு­களை ஆராய பாகிஸ்­தா­னிய அதி­கா­ரி­கள் இரண்டு தனிப்­பட்ட செயற்­திட்­டங்­களை ஆராய்ந்­த­து­டன் தேவை­யான 34 நட­வ­டிக்­கை­களையும் மேற்­கொண்­ட­னர்," என்று திரு குமார் பாரி­சில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்றில் தெரி­வித்­தார்.