வாஷிங்டன்: கல்விக்கான கடனை மாணவர்கள் திருப்பிச் செலுத்தாமல் இருக்க வகைசெய்யும் தாம் அறிவித்த திட்டத்தில் கிட்டத்தட்ட 22 மில்லியன் மாணவர்கள் சேர்ந்துகொண்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார். எனினும், அதற்கு சில மணிநேரத்திற்குப் பிறகு செயின்ட் லூயிசில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று திட்டத்திற்குத் தற்காலிகத் தடை விதித்தது.
குடியரசுக் சட்சியின் ஆட்சியில் இருக்கும் ஆறு மாநிலங்கள் திட்டத்திற்கு எதிராகத் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்நிலை உருவாகி உள்ளது. அதன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை திட்டத்தைச் செயல்படுத்தமுடியாது.

