உக்ரேனின் பல பகுதிகளில் மின்சாரத் தடை

உக்ரேனின் பல பகுதிகளில் மின்சாரத் தடை

1 mins read
97bafaf9-a4e9-42d0-b4f6-265b226238e4
உக்ரேனின் கார்கிவ் வட்டாரத்தில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மின்சார இணைப்பைச் சரிசெய்யும் ஊழியர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

கியவ்: உக்­ரே­னின் மேற்­குப் பகு­தி­யில் எரி­சக்­திக் கட்­ட­மைப்­பைக் குறி­வைத்து ரஷ்யா தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டுள்­ளது. உக்­ரே­னின் தேசிய மின்­சார விநி­யோகிப்பு நிறு­வ­ன­மான உக்­ரெ­னெர்கோ இதைத் தெரி­வித்­தது.

இதைத் தொடர்ந்து அந்­நாட்­டின் பல பகு­தி­களில் மின்­சா­ரத் தடை ஏற்­பட்­ட­தாக சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் கூறி­னர். மேற்கு உக்­ரே­னின் முக்­கிய மின்கட்டமைப்புகளைக் குறி­வைத்து ரஷ்யா ஏவு­கணைத் தாக்­கு­தல் நடத்­தி­ய­தாக உக்­ரெ­னெர்கோ சமூக வலைத்­தளங்­களில் தெரி­வித்­தது.

தாக்­கு­த­லால் ஏற்­பட்ட சேதம் இம்­மா­தம் 10லிருந்து 12ஆம் தேதிக்கு இடைப்­பட்ட காலத்­தில் நேர்ந்த சேதத்­தை­வி­ட­வும் மோச­மாக இருக்­க­லாம் என்­றும் உக்­ரெ­னெர்கோ குறிப்­பிட்டது.

இம்­மா­தம் 10ஆம் தேதி­யன்று பல உக்­ரே­னிய நக­ரங்­கள்­மீது ரஷ்யா 80க்கும் அதி­க­மான ஏவு­கணைத் தாக்கு­தல்­களை நடத்­தி­ய­தாக கியவ் தெரி­வித்­தி­ருந்­தது.