யங்கூன்: தவறான முறையில் பணம் புரளும் அபாயம் ஆக அதிகமாக இருக்கும் நாடுகள் பட்டியலில் தென்கிழக்காசிய நாடான மியன்மார் சேர்க்கப்பட்டுள்ளது.
நிதி நடவடிக்கை செயற்குழுவின் 'பிளாக்லிஸ்ட்' எனும் அந்தப் பட்டியலில் மியன்மார் இப்போது இடம்பெற்றுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மியன்மார் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான அறிக்கையில் முதலில் தெரியவந்தது. நான்காண்டுகளுக்குப் பிறகும் இது சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் நிலவுவதாக நிதி நடவடிக்கை செயற்குழுவின் தலைவர் திரு டி. ராஜ குமார் கூறினார்.

