அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசின் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிசின் தீபாவளி கொண்டாட்டம்

1 mins read
27db0c02-3fb0-4181-b1c6-c8ebe1488e6c
-

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது குடும்பத்தாருடன் வாஷிங்டனின் தீபாவளியைக் கொண்டாடியுள்ளார். தமது கணவர், மற்ற குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் மாத்தாப்பூ கொளுத்தி திருவாட்டி ஹாரிஸ் தனது இல்லத்தில் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டார்.

திருவாட்டி ஹாரிஸ் இந்திய வம்சாளியைச் சேர்ந்தவர். அவருடைய தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்வர், தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர்.

தீபாவளி அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் இதற்கு முன்னதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

நியூயார்க்கின் பிரபல டைம்ஸ் சதுக்கம் தீபாவளி ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கிறது. அடுத்த ஆண்டிலிருந்து நியூயார்க்கில் தீபாவளி பள்ளி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகையைப் பற்றி சிறுவர்கள் மேலும் அறிந்துகொள்ள இது உதவும் என நியூயார்க் மேயர் கூறினார். அமெரிக்காவில் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்திய வம்சாளியினர் வசிக்கின்றனர். அந்நாட்டின் மக்கள்தொகையில் இது 1.4 விழுக்காடு.