கியவ்: உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பைக் குறிவைத்து ரஷ்யா புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாக உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரேனின் மேற்கு, மத்திய, கிழக்குப் பகுதிகளின்மீது நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்கள் பெரிய அளவில் பல இடங்களில் நிகழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதனால் சுமார் 1.5 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கியவ் தெரிவித்தது. எனினும், ரஷ்யாவின் பெரும்பாலான ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் சுட்டுத் தள்ளப்பட்டு வருவதாக ஸெலென்ஸ்கி கூறினார்.

