வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஹேம்ப்ஷயர் மாநிலத்தின் கீன் நகரில் விமானம் ஒன்று அடுக்குமாடிக் கட்டடத்தின்மீது விழுந்தது. அப்போது விமானத்தில் இருந்த இருவர் மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
போஸ்டன் நகருக்கு 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீன் நகரில் பல குடும்பங்கள் வாழும் கட்டடத்தின்மீது விமானம் விழுந்தது. விபத்து நேர்ந்ததும் கட்டடம் தீப்பிடித்துக்கொண்டது. ஆனால் நிலத்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானம் மோதியபோது பெரிய சத்தம் கேட்டதாகவும் கட்டடம் உலுக்கப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

