மூன்றாவது தவணைக்காலத்திற்கு சீன அதிபராக ஸி ஜின்பிங் தேர்வு

பெய்­ஜிங்: வர­லாறு காணாத வகை­யில் மூன்­றா­வது தவ­ணைக்­கா­லத்­திற்கு சீனா­வின் அதி­ப­ராக திரு ஸி ஜின்­பிங் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளார். அதைத் தொடர்ந்து அவர் தமது அர­சி­யல் கூட்­டா­ளி­க­ளைத் தலை­வர்­க­ளாக நிய­மித்­துள்­ளார்.

திரு ஸி நிய­மித்­துள்ள புதிய உச்­ச­மன்ற ஆட்­சிக் குழு­வில் ஏழு ஆண்­கள் இடம்­பெ­று­கின்­ற­னர். அவர்­களில் நால்­வர் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­ட­வர்­கள். அனை­வ­ரும் திரு ஸியின் அர­சி­யல் கூட்­டா­ளி­கள். எதிர்­பா­ரா­வி­த­மாக துணைப் பிர­த­மர் ஹு சுன்­ஹுவா ஆட்­சி­மன்­றக் குழு­வில் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை.

அவர் பதவி உயர்வு பெறு­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

திரு ஸிக்கு அடுத்­த­ப­டி­யாக இரண்­டாம் நிலைக்கு ஷாங்­காய் நக­ருக்­கான சீன கம்­யூ­னிஸ்ட் கட்­சித் தலை­வர் திரு லி சியாங் உயர்த்­தப்­பட்­டது மற்­றோர் எதிர்­பாரா நிகழ்வு. அவரே சீனா­வின் அடுத்த பிர­த­ம­ரா­கப் பதவி வகிப்­பார் எனக் கூறப்­ப­டு­கிறது. ஷாங்­கா­யில் கொவிட்-19 நில­வ­ரத்­தைக் கையாண்­ட­தன் தொடர்­பில் திரு லி கண்­ட­னத்­திற்கு ஆளா­ன­வர்.

முன்­ன­தாக, நாடா­ளு­மன்ற அமர்வு நிறை­வ­டை­ய­வி­ருந்­த­போது சீனா­வின் முன்­னாள் அதி­பர் ஹு ஜின்­டாவ் எதிர்­பாரா வகை­யில் பெய்­ஜிங் மக்­கள் அரங்­கி­லி­ருந்து அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.

திரு ஹுவின் உடல்­ந­லம் கார­ண­மாக அவர் அரங்­கி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தாக ஸின்­ஹுவா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் டுவிட்­ட­ரில் பதி­வேற்­றம் செய்த இந்­தக் காட்சி பதி­வான காணொளி பல­ரால் பகி­ரப்­பட்­டது.

இதற்­கி­டையே, மூன்­றா­வது தவ­ணைக்­கா­லத்­திற்கு திரு ஸி ஜின்­பிங் சீன அதி­ப­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­தற்கு ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டி­னும் வட­கொ­ரி­யத் தலை­வர் கிம் ஜோங் உன்­னும் தங்­க­ளின் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!