டி20 உலகக் கிண்ணம்

டி20 உலகக் கிண்ணம்

1 mins read
7ec1b56a-d09c-4968-933a-c894962c326c
-

மீண்டுவந்து பாகிஸ்தானை அதிரவைத்த இந்தியா

மெல்பர்ன்: ஆண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வியின் விளிம்பிலிருந்து பரம வைரி பாகிஸ்தானை வென்றுள்ளது இந்தியா. சூப்பர் 12 சுற்று இரண்டாம் பிரிவு ஆட்டத்தில் இந்தியா நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகண்டது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ஓட்டங்களைக் குவித்தது. ஆட்டத்தில் வெற்றிபெற இந்தியா 160 ஓட்டங்களை எடுக்கவேண்டியிருந்தது.

பிறகு 20வது ஓவர் வரை விட்டுக்கொடுக்காமல் கடைசிப் பந்தில் வெற்றிபெறுவதற்கான இலக்கை அடைந்தது இந்தியா. ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

ஆட்டத்தில் பந்தடிக்கும் இந்திய நட்சத்திரம் விராத் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

அயர்லாந்தை நொறுக்கிய இலங்கை

ஹொபார்ட்: சூப்பர் 12 சுற்றின் முதல் பிரிவு ஆட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை நொறுக்கியது இலங்கை (படம்). முதலில் பந்தடித்த அயர்லாந்து எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ஓட்டங்களை எடுத்தது. அதற்குப் பிறகு பதினைநேந்தே ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களைக் குவித்து வெற்றிகண்டது இலங்கை.

பந்தடிக்கும் இலங்கையில் குசால் மெண்டிஸ். படம்: ஏஎஃப்பி