ஜோகூர் பாரு: மலேசியாவின் காஸ்வே கடற்பாலப் பகுதியில் உள்ள குடிநுழைவு சுங்கச் சாவடி நிலையத்தில் கூட்டத்தைக் கையாளக் கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளிக்கான நீண்ட வார இறுதியை முன்னிட்டு அதிகமானோர் பேருந்தில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்வதால் நெரிசல் ஏற்பட்டது. அதனால் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜோகூர் பாருவின் தென் மாவட்ட காவல்துறை தலைவர் ராவுப் செலாமாட் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு 5,000க்கும் அதிகமானோர் சுங்கச் சாவடி நிலையத்தில் குவிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

