மலேசிய பொதுத் தேர்தலுக்காக நாடு திரும்புவோர் வேண்டுகோள்

மலேசிய பொதுத் தேர்தலுக்காக நாடு திரும்புவோர் வேண்டுகோள்

2 mins read
d5dcabdb-baeb-4ecc-83da-dc60fe9c5d2a
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் அடுத்த பொதுத் தேர்­த­லுக்கு அண்டை நாடான சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் அந்­நாட்­ட­வர் பலர் நாடு திரும்­பு­வர் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்போது கூட்­டத்­தைச் சமா­ளிக்க மலே­சி­யா­வின் சட்ட அமலாக்கப் பிரிவுகள், குறிப்­பாக குடி­நு­ழை­வுப் பிரிவு, தயார்­நிலை­யில் இருக்­கும் என்று சிங்­கப்­பூ­ரில் வேலை செய்­யும் மலே­சி­யர்­கள் நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர்.

சாலை போக்­கு­வ­ரத்து நெரி­சலை சகித்­துக்­கொள்ள தாங்­கள் தய­ாராய் இருப்­ப­தாக அவர்­கள் கூறி­னர். எனி­னும், நிலை­மை­யைச் சீராக்க சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­கள் கூடு­தல் அதி­கா­ரி­க­ளைப் பணி­யில் நிறுத்­த­வேண்­டும் என்று அவர்­கள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் 19ஆம் தேதி­யன்று மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. ஐந்­தாம் தேதி­யன்று வேட்­பா­ளர்­கள் வேட்பு மனுத் தாக்­கல் வெய்­வர். இரு நாள்களும் சனிக்கிழமைகளில் வருகின்றன.

சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வையும் இணைக்­கும் உட்லண்ட்சில் உள்ள ஜோகூர் கடற்­பா­லம் உல­கில் ஆக அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­படும் எல்­லைப் பகு­தி­களில் ஒன்று. கொள்­ளை­நோய்ப் பர­வ­லுக்கு முன்பு தின­மும் சுமார் 415,000 பேர் ஜோகூர் கடற்பாலம், துவாஸ் இரண்­டாம் இணைப்பு இரண்டையும் கடப்­பர்.

இதற்­கி­டையே, சிறையில் இருக்­கும் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக் இடம்­பெற்ற ஒரு காணொளி மலே­சி­யா­வின் 'ஆர்­டி­எம்' ஒளிவழி ஒன்றில் ஒளி­ப­ரப்­பா­னது. திரு நஜிப் சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்­றத் தொடங்கி இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு அந்­தக் காணொளி நேற்று முன்­தி­னம் தொலைக்­காட்சி நிகழ்ச்சி ஒன்­றில் இடம்­பெற்­றது.

அதற்­குப் பதி­ல­ளித்த சிறைச்­சா­லைப் பிரிவு, சிறை­யில் எந்­தக் காணொ­ளி­யும் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை என்ற தெரி­வித்­தது. திரு நஜிப் சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்­று­வதற்கு முன்­னரே காணொளி பதி­வு­செய்­யப்­பட்­டி­ருக்­கக்கூடும் என்று அது கு­றிப்­பிட்­டது.