ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இருக்கும் அந்நாட்டின் அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கி வைத்திருந்த ஒரு பெண்ணை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். எனினும், அந்த நேரத்தில் அதிபர், மாளிகையில் இல்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை எட்டு மணியளவில் நிகழ்ந்ததாக அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார். துப்பாக்கி வைத்திருந்த பெண், மாளிகை வளாகத்திற்குள் நுழையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். அப்பெண்ணுக்கு 20 வயதுக்கு மேல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

